‘கேஜிஎஃப் 2’ அமேசான் பிரைமில் ரிலீஸ் - எப்போதுன்னு தெரியுமா? - இதோ வெளியான அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

Yash
By Nandhini Apr 30, 2022 09:35 AM GMT
Report

உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.

கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்‌ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது.

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது. 

இந்நிலையில், கேஜிஎஃப் 2 படம் மே 6ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியிடலாம் என்பதால், டிஜிட்டலிலும் லாபத்தை பிடிக்க அமேசான் நிறுவனம் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இச்செய்தியைக் கேட்ட ரசிகர்கள் குஷியில் துள்ளி குதித்து வருகின்றனர். 

‘கேஜிஎஃப் 2’ அமேசான் பிரைமில் ரிலீஸ் - எப்போதுன்னு தெரியுமா? - இதோ வெளியான அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி | Kgf 2 Ott