திருமண அழைப்பிதழில் ‘கே.ஜி.எஃப் 2’ டயலாக்.... - இணையத்தில் வைரல் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Movie KGF-2 Dialog Wedding-Invitation
By Nandhini Apr 20, 2022 02:04 PM GMT
Report

உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.

கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது.

கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்‌ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம் 300 கோடிக்கு மேல் உலகளவில் வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக சஞ்சய் தத் உடனான மோதலுக்கு பின் யாஷ் பேசும் “Violence...Violence...Violence...I dont like it... I avoid... But Violence likes me... I cant avoid” என்கிற வசனம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லகாவியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் வயலன்ஸ் என்கிற டயலாக்கை சற்று மாற்றி திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.