பெரிய அளவில் பேசப்படம் KGF-2 படத்தின் எடிட்டர் யார்ன்னு தெரியுமா? 19 வயசு இளைஞர்தான் - குவியும் பாராட்டு

kgf-2 editing-work 19-years-old-youth உஜ்வல்குல்கர்னி எடிட்டர் 19வயசுஇளைஞர்
By Nandhini Apr 16, 2022 05:07 AM GMT
Report

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப். சேப்டர் 1' திரைப்படம் இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கிய இப்படத்தின் 2 ஆம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் தற்போது விற்பனையாகி இருக்கிறது.

காட்சிகளை மிக சிறப்பாக அமைத்திற்கும் படக்குழுவின் கடின உழைப்பும் தெளிவாக தெரிகிறது. இப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், படத்தின் எடிட்டிங் பணிகள்தான். இப்படத்தை பார்த்த மக்கள் எடிட்டிங் பணிகளை பாராட்டி வருகின்றனர்.

மிகப் பெரியளவில் பேசப்படும் இப்படத்தின் எடிட்டர் யார் செய்தார் என்றால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள்.

உஜ்வல் குல்கர்னி என்ற 19 வயது இளைஞர்தான் KGF-2 படத்தில் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பாணியில் KGF படத்தின் பாடலுக்கு எடிட் செய்து வீடியோ ஒன்றை அப்லோட் செய்திருந்தார்.

அந்த பணியை இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு பிடித்து போகவே , உஜ்வல் குல்கர்னியை அழைத்து KGF 2-க்கான ட்ரைலர் எடிட் செய்யும் வாய்ப்பு கொடுத்தார்.

அதனை உஜ்வல் பிரமாதமாக செய்துவிட்டதால், மொத்த படத்திற்கான வேலையையும் அவரை நம்பி இயக்குநர் நம்பி கொடுத்துள்ளார்.  

பெரிய அளவில் பேசப்படம் KGF-2 படத்தின் எடிட்டர் யார்ன்னு தெரியுமா? 19 வயசு இளைஞர்தான் - குவியும் பாராட்டு | Kgf 2 Editing Work 19 Years Old Youth