ராக்கி பாயாக மாறிய வார்னர் - மாஸான வீடியோ - வைரலாக்கும் ரசிகர்கள்
தற்போது கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது.
கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் தற்போது விற்பனையாகி இருக்கிறது.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி, கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பேமஸான பஞ்ச் டயலாக்கை பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் இவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். கையில் கிரிக்கெட் பேட் உடன் ராக்கி பாய் ஆக மாறி அந்த வசனத்தை அசத்தலாக பேசி அதகளப்படுத்தி உள்ளார் வார்னர்.
டேவிட் வார்னர் ஐதராபாத் அணியில் இருந்தபோது அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் ஆர்வம் அதிகரித்தது.
இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக இந்திய படங்களின் பாடல்களையும், டயலாக்குகளையும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டு இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவுமாகிவிட்டார் டேவிட் வார்னர்.
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
இலங்கை தொழிலாளர்களின் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மீது இணையவழி தாக்குதல்! அரசாங்கம் விளக்கம் IBC Tamil