இரும்பு பட்டறையில் வேலை பார்த்த கே.ஜி.எப்.-2 இசையமைப்பாளர் - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் நெகிழ்ச்சி
உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.
கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் தற்போது விற்பனையாகி இருக்கிறது.
கேஜிஎஃப் 2 திரைப்படம் 300 கோடிக்கு மேல் உலகளவில் வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கே.ஜி.எப்-2 இசையமைப்பாளரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கே.ஜி.எப்-2 ரிலீசுக்கு முன் இப்படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் லாக்டவுனில் இரும்பு பட்டறையில் 35 ரூபாய்க்கு வேலை பார்த்துள்ளார்.
கர்நாடகாவில், குண்டாபுரா தாலுக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ரவி பஸ்ருர், சிறு வயது முதலே இசையின் மீது கொண்டுள்ளார்.
சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு தனது தந்தையின் இரும்பு பட்டறையில் சிற்பங்களை வடிவமைக்கும் தொழிலை இவர் செய்து வந்துள்ளார்.
'உக்ரம்' என்ற படத்திற்கு இசையமைத்து தனது திரை பயணத்தைத் தொடங்கிய ரவி பஸ்ரூருக்கு, இயக்குநர் பிரசாந்த் நீலன் தான் முதல் முதலாக கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.
தற்போது, சமூகவலைத்தளங்களில் இரும்பு பட்டறையில் வேலை பார்த்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.