அடேங்கப்பா.... மாபெரும் சாதனை படைத்த கேஜிஎஃப் 2 - வெளியான 2வது நாளே படத்தின் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?
உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது. கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது.
கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் தற்போது விற்பனையாகி இருக்கிறது.
இந்நிலையில், ஏப்ரல் 15ம் தேதியான நேற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது.
இரண்டாம் நாளான இன்று கேஜிஎஃப் 2 திரைப்படம் 275 கோடி முதல் 280 கோடி வரை உலகளவில் வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.