அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த கேஜிஎஃப் 2 - படக்குழுவினர் மகிழ்ச்சி

Yash
By Nandhini Apr 30, 2022 09:51 AM GMT
Report

உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.

கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்‌ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது.

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் நேற்று வரை 1000 கோடிகளை கடந்து வசூல் செய்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் இதுவரை 826 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு சாதனையாக இன்று கர்நாடகாவில் மட்டும் 150 கோடி வசூல் சாதனை படைக்க உள்ளது கேஜிஎஃப் 2.

இப்படம் இந்த வார இறுதியில் பாகுபலி 2 சாதனையை நெருங்க இருக்கிறது. அதேபோல், விரைவில் அமீர்கானின் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த கேஜிஎஃப் 2 - படக்குழுவினர் மகிழ்ச்சி | Kgf 2 Collection 1000 Cores