அடேங்கப்பா... தமிழகத்தில் மட்டும் கேஜிஎஃப் - 2 படம் இத்தனை கோடி வசூலா? - வெளியான தகவல்
உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது. கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது.
பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது.
100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளை கடந்து வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 826 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் அமீர்கானின் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கே.ஜி.எஃப் -2 தற்போது, தமிழகத்தில் வெளியான டப்பிங் படத்திலேயே கே.ஜி.எஃப் - 2 ரூ 100 கோடிக்கு மேல் வசூல்செய்து கே.ஜி.எஃப்-2 சாதனை படைத்துள்ளது. அதோடு அதிக வசூல் செய்த முதல் டப்பிங் தமிழ் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது.

கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil