உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் வேட்டை செய்த கேஜிஎஃப் -2 : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, நடிகர் யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.
கேஜிஎஃப் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கேஜிஎஃப் 2-ம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது.
நடிகர் யாஷ் உடன் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது.
கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 50 கோடிக்கும் மேல் விற்பனையான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் நிகழ்த்தி வருகிறது.
1000 CR MARK WORLDWIDE ?
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) May 4, 2022
Thankyou all??♥️#KGFChapter2 @Thenameisyash @prashanth_neel @VKiragandur @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @DreamWarriorpic @PrithvirajProd pic.twitter.com/07CMvjHail
100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெளியான இரண்டாம் நாளே உலகம் முழுவதும் 300 கோடி வரை வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது வரை 1000 கோடி வசூல் வேட்டை செய்து மாபெரும் சாதனை செய்திருக்கிறது.
இந்த தகவலை படத்தின் நாயகி ஷ்ரீநிதி ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் அல்லாத பிற மொழி படங்களில் பாகுபலி 2 மற்றும் கே ஜி எஃப் 2 திரைப்படம் மட்டுமே இதுவரை தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.