இங்கிலாந்து அணியை கிண்டலடித்த கெவின் பீட்டர்சன்: என்ன சொல்லியிருக்கிறார்?

england tour kevin peterson india match
By Fathima Aug 14, 2021 01:21 PM GMT
Report

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே விளையாடுவதாக காட்டமாக விமர்சித்துள்ளார் கெவின் பீட்டர்சன்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் தற்பொது நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இதிலும், ஜோ ரூட் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ரோரி பர்ன்ஸ் 49 ரன்கள் சேர்த்தார்.   

ஜோ ரூட்டைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை.

இந்நிலையில் கெவின் பீட்டர்சன் டுவிட்டரில், தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.

வேறு யாராவது ஒருவர் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவது அவசியம். விரைவாக திரும்புங்கள் எனத் தெரிவித்துள்ளார்.