இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளராக இந்த வீரரா? மிரண்ட ரசிகர்கள்!
பிசிசிஐ இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க போவதாக செய்திகள் வெளியானது.
இந்திய அணி பேட்டிங்
இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங்கில் தடுமாறி பல்வேறு தொடரில் தோல்வியை தழுவி வருகிறது. இதனால், பிசிசிஐ இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க போவதாக தகவல் வெளியானது.
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கேவின் பீட்டர்சன், எக்ஸ் தளத்தில், அந்த பொறுப்புக்கு வர தாம் ஆர்வத்துடன் இருப்பதாக பதிலளித்தார்.
பீட்டர்சனின் வருகை இந்திய அணிக்கு பல நன்மையை தரும் பீட்டர்சன் கோலியுடன் பரஸ்பர மரியாதையைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் அடிக்கடி கோலியை தனது தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக பாராட்டியுள்ளார்.
பிசிசிஐ முடிவு?
இந்தியாவின் தற்போதைய பயிற்சிப் பணியாளர்களில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், பவுலிங் பயிற்சியாளர் மோர்ன் மோர்கல், உதவிப் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர் மற்றும் ரைன் டென் டூஷேட், பேட்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோர் உள்ளனர்.
குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக கூடுதலாக உள்ளூர் ஜாம்பவான்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.