இந்த அளவுக்கு பனியின் தாக்கம் இருக்குமென எதிர்பார்க்கவில்லை... - தோல்வி குறித்து கேஷல் மகராஜ் உருக்கம்

South Africa National Cricket Team
By Nandhini Oct 10, 2022 10:50 AM GMT
Report

இந்த அளவுக்கு பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என தோல்வி குறித்து கேஷல் மகராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில், முதலில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இப்போட்டியில் களமிறங்கியது.

இதனையடுத்து, 45.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

keshav-maharaj-south-africa-national-cricket-team

கேஷவ் மகராஜ் உருக்கம்

2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகராஜ் பேசுகையில், இந்த அளவுக்கு பனியின் தாக்கம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். போக போக ஆடுகளத்தன்மை மெதுவாக இருக்கும் (ஸ்லோ) என்று நினைத்தோம். ஆனால் 30-வது ஓவருக்கு பிறகு பனியின் தாக்கத்தால் ஆடுகளம் பேட்டிங்குக்கு எளிதாக மாறி விட்டது என்றார்.