பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி; 'ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்ட தென் ஆப்பிரிக்க வீரர்!
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் 'ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜெய் ஸ்ரீ ஹனுமான்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற பின் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர் 'கேசவ் மகாராஜ்' தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டுள்ளார்.
கேஷவ் மகாராஜ்
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கேஷவ் மகாராஜ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் அவரது தந்தை வழி முன்னோர்கள் 1874 இல் குடியேறியவர்கள்.
நூறு ஆண்டுகளை கடந்து தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும் கேஷவ் மகாராஜ் இந்திய ஆன்மீக மற்றும் கலாசார தொடர்புகளை இன்னும் தொடர்கிறார். தன்னை தீவிர ஹனுமான் பக்தராக அவ்வப்போது காட்டிக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.