2 நாட்களா சாப்பாடு, தண்ணீர் இல்லாம மலையில் சிக்கிக் கொண்ட நபர் - என்ன நடந்தது?

kerala truckingmanissue
By Petchi Avudaiappan Feb 08, 2022 11:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கேரளாவில் நண்பர்களுடன் மலைக்கு ட்ரெக்கிங் சென்ற இளைஞர் மலையிடுக்கில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலாக்காடு அருகே மலப்புழா பகுதியிலுள்ள மலைக்கு சில தினங்களுக்கு முன்பு 3 கல்லூரி நண்பர்கள் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இவர்களில் இரு இளைஞர்கள் பத்திரமாக கீழே இறங்க ஒரு நபர் மட்டும் எதிர்பாராதவிதமாக மலையிடுக்கில் சிக்கிக் கொண்டார். 

நீண்ட நேரமாக கீழே இறங்க முடியாமல் அவர் தவிப்பதைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முயற்சிகள் பலனளிக்காததால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும் குன்னூரில் உள்ள ராணுவத்தினரும் இளைஞரை மீட்க ஹெலிகாப்டரில் வந்த நிலையில் மலையிடுக்கில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 2 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அந்த இளைஞரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞரை விரைவில் மீட்க இந்திய ராணுவத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.