போன் வேணுனா கால்'ல விழு - கேரளாவில் ரவுடி செய்த அட்டுழியம் - Viral Video..!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இளைஞரைக் காலில் விழ வைத்து காலில் முத்தமிட வைத்த ரவுடியின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஏர்போர்ட் சஜன்
கேரளா மாநிலம் CPIM கட்சியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஏர்போர்ட் சாஜன். இவரின் மகன் தற்போது இளைஞர் ஒருவரை அவரது செல்போனுக்காக தனது காலில் முத்தமிட வைத்து இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போன் வேணும்னா கால்ல விழு
இச்சம்பவம் திருவனந்தபுரம் நகர பகுதியில் நடைபெற்றுள்ளது. ரவுடியாக அறியப்படும் ஏர்போர்ட் டேனி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.அனந்தபுரி மருத்துவமனை அருகே பைக்கில் வந்த வாலிபரின் கையிலிருந்த மொபைல் போனை பறித்த டேனி, கரிமணல் பகுதிக்கு அந்த வாலிபரை வரவழைத்துள்ளார். அப்போது அங்கு, தனது கும்பலுடன் காத்திருந்த டேனி அந்த இளைஞரிடம் மொபைல் போன் வேண்டுமென்றால் தன் காலில் விழுந்து வணங்குமாறு மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து டேனி தகாத வார்த்தைகள் பேசி தனது காலில் அந்த வாலிபரை முத்தமிடவும் வைத்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்று சில தினங்கள் ஆகியும் டேனி என்பவர் ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அவர் மீது இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Warning ⚠️ Abusive Language!!!
— Pratheesh Viswanath (@pratheesh_Hind) August 3, 2023
Meet Mr Danny, Son of CPM Gunda Sajan who is busy with his true communist character!! After checking their mobiles, He is insisting the local boys to kiss his feet !!! This is the level of fascism the ruling party leaders carry in Kerala..
Most… pic.twitter.com/KeJVC5N72j