''பேர் சொல்லும் பிள்ளை'' என்பது இதுதானா- கமலின் ஓவியத்தில் உலக சாதனை படைத்த கேரள பெண்!

worldrecord kamalpainting keralawoman
By Irumporai Jun 27, 2021 01:10 PM GMT
Report

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நேஹா ஃபாத்திமா. மாணவியான இவர் வித்தியாசமான முறையில் ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஒரு புள்ளி கூட இல்லாமலும் சிறு கோடு கூட இல்லாமல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் உருவத்தை வரைந்திருக்கிறார். 

கமல்ஹாசனின் எழுத்துருக்களைக் கொண்டு 2.5 மணி நேரத்தில் இந்த ஓவியத்தைத் தீட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

இதனைக் கண்டு வியந்துபோயுள்ளார் கமல். ஃபாத்திமாவைப் பாராட்டி ட்வீட்டும் செய்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில்: கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார்.

இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். பேர் சொல்லும் பிள்ளை' என்பது இதுதானா என புகழ்ந்துள்ளார்.