பழனியில் கேரள பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.. வந்தவர் கணவரும் இல்லை.. எல்லாம் நாடகமா?
பழனியில் கேரள பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்அந்த பெண்ணுடன் வந்தவர் கணவர் இல்லை என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கடந்த 19 ஆம் தேதி ஆன்மிக சுற்றுலா வந்த கணவனும், மனைவியும் ஒரு தங்கும் விடுதியில் தங்கிருந்தபோது கணவனை தாக்கிய மர்ம கும்பல் .
அந்த நபரின் மனைவியினை தனியாக கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதனை வாங்காமல் காவல்நிலைய அதிகாரிகள் அலைகழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கேரளாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பெண்ணின் கணவர் தெரிவித்த புகாரின் பேரில், கேரள டிஜிபி, தமிழ்நாடு காவல் துறைக்கு தகவல் அளித்தால் இந்த விவகாரம் பெரிதானது.
இதனையடுத்து சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ரவுளி பிரியா நடத்திய விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளன
அதில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதாவது சம்பவம் கடந்த மாதம் 20 ஆம் தேதி நடந்துள்ளது.
ஆனால் 25 ஆம் தேதி வரை கணவனும் மனைவியும் பழனியில் சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில்தான் உண்மை வெளிவந்துள்ளது. அதாவதுகூட்டுப்பாலியல் கொடுமை நடந்த பிறகும் அவர்கள் ஏன் அத்தனை நாட்கள் அங்கு சுற்றித்திரிந்தார்கள்?
ஆன்மீக சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஜூலை 5 ஆம் தேதியே கோவில்கள் திறக்கப்பட்டன.
அப்படி இருக்கும்போது ஜூன் மாதம் அவர்கள் எப்படி கோவிலுக்கு வந்திருக்க முடியும்.
அதேபோல் அவர்கள் தங்கிருந்த விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது, அவர், மதுபோதையில் இருவரும் சண்டையிட்டதால் அவர்களை வெளியேற்றிவிட்டதாகவும்,
அதன் பிறகு கேரள காவல் துறையைச் சேர்ந்தவர் என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இருவரும் கணவன் மனைவி என கூறியதும் பொய் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அந்த பெண்ணிடம் நடத்தபட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்பதும் தெரியவந்திருப்பதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளா சென்றுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் தமிழக போலீசார் அவர்கள் பாணியில் விசாரணை நடத்தவுள்ளனர்.