ஆண் போல பேசி சிறுமியை கடத்திய இளம்பெண் - விசாரனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

smuggling keralawoman
By Petchi Avudaiappan Jan 18, 2022 07:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி கடந்த வாரம் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து உறவினர்கள் ஆலப்புழா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

மாணவியின் செல்போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி மெசஞ்சர் என்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அப்போது சந்து என்ற வாலிபருடன் சாட்டிங் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் அவர்தான் சிறுமியை கடத்தி சென்றதும், அவர் ஆண் அல்ல இளம்பெண் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனிடையே ஆண் போல பேசி சிறுமியைக் கடத்திச் சென்றவர் சந்தியா என்ற பெண் என்பது தெரிய வந்தது.மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டில் 14 வயது சிறுமி ஒருவரை தொல்லை கொடுத்து கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தியா சமூக வலைதளங்களில் இதேபோல் மாணவிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கான கஷ்டங்களை கூற வற்புறுத்தி சிறுமிகளை தனது வலையில் வீழ்த்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

விசாரணைக்கு பின் போலீசார் சந்தியாவை மாவேலிக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு்ள்ளது.