கணவருக்காக தன் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மனைவி - வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்
கேரளாவைச் சேர்ந்த மனைவி ஒருவர் கணவருக்காக தன் சிறுநீரகத்தை தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை வரவழைத்துள்ளது.
சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மனைவி
கேரளாவில், 98 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்டதை அடுத்து, கணவருக்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக மனைவி கொடுத்து உயிரை காப்பாற்றியுள்ளார்.
டயாலிஸிஸ் செய்வதற்காக ஒவ்வொரு முறையும் சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்வதால், அவரின் வலியை தாங்க முடியாத மனைவி, கணவனின் உயிரை காப்பாற்ற இந்த செயலை செய்துள்ளார்.
தற்போது இவர்களுடைய மகன் லியோ என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், அவருடைய தாய்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
