பிரபல மாடல் அழகி தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை!
கேரளாவைச் சேர்ந்த 26 வயதான மாடலும்,நடிகையுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்திவ் அவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த திருநங்கையான ஷெரின் செலின் மாடலாகவும், நடிகையுமாகவும் இருந்தார். இவர் கொச்சியின் சக்கரபரம்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
ஆலப்புழாவை சேர்ந்த ஷெரின் செலின் இரண்டு வருடங்களாக கொச்சியில் வசித்து வந்தத நிலையில், நேற்று அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஷெரின் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், அவர் சொந்த பிரச்சினைகள் காரணமாக துயரத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலைப்போல தெரிவதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடற்கூராய்வு முடிவுக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் காசர்கோட் பகுதியை சேர்ந்த 22 வயதான சஹானா என்ற நடிகை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது அதேபோல மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.