இனி என்ட ஸ்டேட் கேரளா அல்ல...மாறப்போகும் பெயர்...நிறைவேறிய தீர்மானம்
கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற கோரி கேரளா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றம்
நேற்று கூடிய கேரள சட்டமன்றத்தில் இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் எந்தவித மாற்றமும் இன்றி முழுவதுமாக ஏற்றுக்கொண்டனர்.
சபாநாயகர் ஒப்புதல்
இதையடுத்து சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் கைக்கூப்பியதை அடிப்படையாக வைத்து கேரளா பெயரை மாற்றும் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து பேசிய கேரள மாநில முதல்வர், “சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகத்தினருக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் மலையாளத்தில் கேரளம் என்று அழைக்கப்படும் நிலையில், நாட்டின் மற்ற மொழிகளில் மட்டும் கேரளா அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.