தி கிரேட் இந்தியன் கிச்சன் - ஆணாதிக்கத்திற்கு எதிராக ஒலித்த திரைப்படம் சிறந்த படமாக தேர்வு

Anupriyamkumaresan
in திரைப்படம்Report this article
கேரளாவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திற்கு அம்மாநில அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கி இருக்கிறார். நடுத்தர குடும்பத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை கதைகளமாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
ஆணாதிக்கத்திற்கு எதிரான சில கேள்விகளை முன் வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வெள்ளம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கப்பெலா திரைபடத்தில் நடித்த நடிகை அன்னா பென்னுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநருக்கான விருது என்னிவர் திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் சிவாவுக்கு கிடைத்துள்ளது. பிரித்விராஜ் நடித்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் சிறந்த பிரபலமான திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
விருதுகளை தேர்வு செய்வதற்கான குழுவில், தமிழக நடிகை சுஹாசினி மணிரத்னமும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.