கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி: பினராயி விஜயன் அறிவிப்பு

kerala-theater-corona
By Jon Jan 03, 2021 09:21 AM GMT
Report

கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதி அளித்துள்ளார் இது குறித்து அவர் குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி கேரள மாநிலத்தில் வரும் 5ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுவதாக தெரிவித்த அவர்.

அரங்குகளில் நடத்தப்படும் கூட்டங்களில் 100 பேர் வரையிலும் வெளியே நிகழ்ச்சிகளை நடத்தினால் 200 பேர் வரையிலும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகளில் 50 சதவீதம் அளவிற்கு பார்வையாளர்களை அனுமதித்து கொள்ளலாம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.