ஓய்வுபெறும் நாளில் ஆசிரியை செய்த நெகிழ்ச்சி செயல்.., பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

Kerala
By Yashini Nov 09, 2026 09:09 AM GMT
Report

kerala teacher renovates school playground- 26 ஆண்டுகளாகப் பணியாற்றிய பள்ளிக்கு, ஓய்வுக்கு முன் ஆசிரியை தனது சேமிப்பில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கி, மாணவர்களுக்கு புதிய விளையாட்டு மைதானத்தைப் பரிசாக அளித்துள்ளார்.

ஆசிரியையின் நெகிழ்ச்சி செயல்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மேற்கு கோரட்டி கிராமத்தில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு வனஜா என்பவர் கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இம்மாத இறுதியில் அவர் ஓய்வு பெற உள்ளார்.

ஓய்வுபெறும் நாளில் ஆசிரியை செய்த நெகிழ்ச்சி செயல்.., பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை | Kerala Teacher Renovates School Playground

இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால், தனது ஓய்வை நினைவுகூரும் வகையில் பள்ளிக்கு புதிய விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க வனஜா முடிவு செய்தார்.

இதற்காக தனது சேமிப்பில் இருந்து ரூ.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். இதையடுத்து, பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் குறைந்த செலவில் விளையாட்டு மைதானத்தைச் சீரமைத்துக் கொடுத்தார்.

இதுகுறித்து ஆசிரியை வனஜா கூறுகையில், "இந்தப் பள்ளிதான் எனது உலகம். விரைவில் ஓய்வு பெற உள்ளதால், எனது நினைவாக மாணவர்களுக்கும் பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். இதற்கு எனது குடும்பத்தினரும் முழு ஆதரவு அளித்தனர்" என்றார்.