பெண்களின் அந்தரங்க பகுதிகளில் டாட்டூ போட்டு பாலியல் வன்கொடுமை - டாட்டூ கலைஞர் கைது..!
கேரளாவில் அந்தரங்க பகுதிகளில் டாட்டூ வரைய சென்ற பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒருவனை கேரளா போலீசார் கைது செய்தனர்.
உடலின் முக்கிய பாகங்களான கை,கால்,முகம் உள்ளிட்டவற்றில் வரையப்பட்டு வந்த டாட்டூ தற்போது அந்தரங்க பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை.
டாட்டூ வரைந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் பெண்கள் உடலின் பாகங்கள் மட்டுமின்றி அந்தரங்க பகுதிகளிலும் டாட்டூ வரைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து பெரும்பாலான பெண்கள் டாட்டூ ஸ்டியோக்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி 18 வயது இளம் பெண் ஒருவர் சமூகவலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் சுஜீஷ் என்பவரின் டாட்டூ ஸ்டுடியோவில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் பற்றி கூறியிருந்தார். சுஜீஷின் டாட்டூ ஸ்டுடியோவுக்கு சென்ற போது,யாரும் இல்லாததை பயன்படுத்தி தன்னை கண்ட இடத்தில் தொட முயற்சித்ததாக கூறியிருந்தார்.
அதை தடுத்த போது தனது முதுகு தண்டுவடத்தில் ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார். மேலும் முதுகுதண்டுவடத்தில் ஊசி போட்ட பிறகு,அவர் அத்துமீறும் போது தன்னால் ஒரு வார்த்தை கூட முடியவில்லை என்று கூறினார்.
தான் இவ்வளவு முட்டாள்தனமாக இருந்ததற்கு அந்த இடத்திலேயே செத்து போயிருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். இதை தொடர்ந்து 6 பெண்கள் சுஜீஷ் மீது புகார் அளித்தனர்.
சுதாரித்துக் கொண்ட சுஜீஷ் கடந்த 4 நாட்களில தலைமறைவானார். இதனிடையே தலைமறைவாக இருந்த சுஜீஷ் கொச்சியில் மறைந்திருந்த போது சனிக்கிழமை போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் சுஜீஷ் கடையில் இருந்த லேப்டாப்,சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதை தொடர்ந்து கேரளாவில் எத்தனை டாட்டூ ஸ்டுடியோக்கள் உள்ளன.அங்கு எத்தனை பேர் பணி புரிந்து வருகின்றனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.