தமிழக-கேரளா எல்லை சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைபுற சோதனை சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க 17944 பேர் இதுவரை கொரானாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் நேற்று மட்டுமே 94 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக - கேரள எல்லை பகுதி காக்கவிளை, களியக்காவிளை, நெட்டா உட்பட்ட சோதனை சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சுகாதாரதுறை அதிகாரிகளுடன் கொரானா சோதனை மையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து இருசக்கர வாகனங்கள் இதரவாகனங்கள் மூலம் வரும் அனைவரையும் எல்லை பகுதி சோதனை சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள கொரானா சோதனை மையத்தில் கொரானா சோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்படி அனுமதிக்கப்படுவார்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் அவர்கள் வெளியே வராமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்ததாவது, குமரி மாவட்டத்தில் போதுமான அளவு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது மூன்று கொரானா தடுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு 400 முதல் 500 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும், தினமும் 3000 முதல் 4000 வரை தடுப்பூசிகள் போடப்படுகிறது.
தமிழக அரசு மத்திய அரசிடம் 50 லட்சம் தடுப்பூசிகளை கேட்டு உள்ளது முதலில் குறைவான அளவே தடுப்பூசாகளை போட்டனர் தற்போது தேவை அதிகரித்து உள்ளது குமரியில் தட்டுபாடு ஏற்படும்போது திருநெல்வேலி மண்டலத்தில் இருந்து பெறப்படுகிறது மாநில அரசுகளிடம் போதிய தடுப்பூசிகள் பெற்று தட்டுபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.
தடுப்பூசி விழிப்புணர்விற்காக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு தனியார் பள்ளி கல்லூரி மூலம் தடுப்பூசி போட ஆலோசிக்கபட்டது நோய்யின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிக அளவு மக்கள் விரும்பி தடுப்பூசி போட முன் வருகின்றனர் என்று பேட்டியின் போது தெரிவித்தார்.