கேரளாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இயங்கும் பள்ளிகள் மூட முடிவு..!
கேரளாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இயங்கும் பள்ளிகள் மூட முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண், பெண் பள்ளிகள்
கேரளாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை, இருபாலரும் இணைந்து படிக்கும் பள்ளிகளாக மாற்றும் படி குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிகள் அனைத்தையும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இருபாலரும் இணைந்து படிக்கும் கலப்பு பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
பள்ளிகளை மூட முடிவு
இந்நிலையில், கேரளாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இயங்கும் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இருபாலர் பள்ளிகளாக மாற்ற 90 நாட்களில் செயல் திட்டம் உருவாக்க குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
