காதலியை கழுத்தறுத்து கொன்று Whatsapp Status..!! சென்னையில் கைதான கேரள இளைஞர்!

Chennai Kerala
By Karthick Dec 02, 2023 05:17 AM GMT
Report

காதலியை கொன்று அதனை வாட்ஸ்ஆப் செயலியில் காதலன் ஸ்டேட்டஸாக வைத்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

காதலி கொலை

கேரளாவை சேர்ந்த தாஜுதீன் என்பவரின் 20 வயதான மகன் ஆசிக் என்பவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரின் 20 மகள் பவுசியா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பழகி வருவதாக கூறப்படுகிறது.

kerala-student-killed-in-chennai-youth-arrested

பவுசியா சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதியில் தாங்கி மருத்துவக் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தான், திடீரென அவரது அறையில் பவுசியா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்

பவுசியா - ஆசிக் இருவரும் தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையில் ஆசிக் பவுசியாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். அத்துடன் இல்லாமல் கொலை செய்துவிட்டு ஆசிக் அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-லும் வைத்துள்ளார்.

இதனை கண்ட பவுசியாவின் தோழிகள் அதிர்ச்சியடைந்த குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். மாணவியின் உடலை மீட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன் எண்ணை வைத்து ஆசிக்கின் இடத்தை கண்காணித்து, பல்லாவரம் ரயில் நிலையம் அருகே அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக தான் இந்த கொலை சம்பவம் நடந்ததை அவர் ஒப்புக்கொள்ள அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.