தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட வேண்டாம் - உளவுத்துறை எச்சரிக்கை
Kerala
By Irumporai
தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது, இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

உளவுத்துறை எச்சரிக்கை
இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது , அதில் தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.