ஆற்றில் மிதந்து வந்த பணப் பெட்டி..கட்டுக்கட்டுக்காக ரூ.500 நோட்டுக்கள் - ஆடிப்போன நபர்
கேரளாவில் ஆற்றில் மிதந்து வந்த பணப் பெட்டியை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டுக்காக ரூ.500 நோட்டுக்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்றில் மிதந்து வந்த பணப் பெட்டி
திருவனந்தபுரம், மாமம் பகுதியில் உள்ள வாமனபுரம் ஆற்றில் இன்று 2 பெட்டிகள் மிதந்து வந்தது. பெட்டிகள் மிதந்து வருவதைப் பார்த்த பினு என்பவர் ஆற்றில் இறங்கி அந்த பெட்டியை கைப்பற்றினார்.
பினு பெட்டியை திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக நிரம்பியிருந்தது. இத்தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆற்றங்கரையில் குவியத் தொடங்கினர்.
போலீசார் விசாரணை
நோட்டுக்களை பரிசோதனை செய்த போது, நோட்டுகளின் ஒரு பக்கம் மட்டும் 500 ரூபாய் நோட்டுக்கு இணையாக அச்சிடப்பட்டு, மறுபக்கம் காலியாக இருந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றி, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
