கேரளா வெள்ளத்தில் சிக்கிய பேருந்து உயிர் பிழைத்த பயணிகள் - பதைபதைக்கும் காட்சிகள்
கேரளாவில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் ஆலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு இடையில் பயணம் செய்யமால் பாதுகாப்பாக இருக்கவும் அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டத்தின் பூன்ஜர் பகுதியில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அதில் சிக்கிய பயணிகள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Dramatic visuals of people being evacuated from a bus in Poonjar /rural kottayam. No loss of life reported as of now. Reports of mudslides/landslips areas of Pala/Kottayam, also causing inundation/flooding in terrains. Caution to be maintained. pic.twitter.com/nVMndiF9X8
— Sneha Koshy (@SnehaMKoshy) October 16, 2021