சிறுவயதில் புரட்சி கேரளாவின் கேப்டன் .. முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்து வந்த பாதை

Kerala Pinarayi Vijayan
By Irumporai Jan 31, 2023 10:28 AM GMT
Report

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் பினராயி என்ற கிராமத்தில் கள்ளிறக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த விஜயன், 16 வயதாக இருக்கும்போது கர்நாடகாவில் ஒரு பேக்கரியிலும் பின்னர் கைத்தறி நெசவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

சிறுவயதில் புரட்சி

பள்ளிக்கு வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து செல்வாராம் விஜயன். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, `என்னிடம் வேறு சட்டைகள் இல்லை என்பதை மறைப்பதற்காக பள்ளி நாட்களில் வெள்ளை நிற சட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன்’ என்று ஒரு இடத்தில் நினைவுகூர்ந்திருக்கிறார்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போதே கடவுள் மறுப்பாளராக மாறியிருந்த அவர், கேரளாவில் அரசியல்ரீதியாக முடிவெடுப்பதில் வலுவான முதல்வராக அறியப்படுகிறார்.

சிறுவயதில் புரட்சி கேரளாவின் கேப்டன் .. முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்து வந்த பாதை | Kerala Politics In Tamil

ஆனால், சிறுவயதில் எப்போதுமே சமையற்கட்டில் தனது தாய் அருகே அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். பேய்கள், பிசாசுகள் மீதான பயத்தால் எங்கும் தனியாகச் செல்வதில்லை என்பதையும் பின்பற்றி வந்ததாக ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ளார்.

அரசியலில் விஜயன் 

அரசியல் ரீதியாக விஜயன் முதன்முதலில் கவனிக்கப்பட்டது 1986ம் ஆண்டில். அப்போது, சி.பி.எம் கண்ணூர் மாவட்டச் செயலாளாராக இருந்த மூத்த தலைவர் எம்.வி. ராகவன் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கினார்.

அந்த சமயத்தில் எம்.வி.ராகவனோடு சி.பி.எம் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இணைந்துவிடாதபடி சிறப்பாகக் களமாடினார். இதனால், எம்.வி.ராகவன் இருந்த இடத்தில் விஜயனை அமர்த்தி அழகுபார்த்தது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பினராயி விஜயன், குத்துபரம்பா தொகுதியில் இருந்து முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு வயது 26.

சிறுவயதில் புரட்சி கேரளாவின் கேப்டன் .. முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்து வந்த பாதை | Kerala Politics In Tamil

கட்சியின் மாநிலச் செயலாளராக 1998ம் ஆண்டு முதல் இருந்து வரும் விஜயன், 1996-1998 காலகட்டத்தில் கேரள மின்சாரத் துறை அமைச்சாராக இருந்தார். அதேபோல், கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

கேரளாவின் கேப்டன்

விஜயன் ஒரு முதலமைச்சராகத் திறமையான நிர்வாகத்தை வழங்கினார். ஆரம்பத்தில் அவர் முதலமைச்சராக இருப்பதை விட கட்சி செயலாளரைப் போலவே செயல்படுகிறார் என்று நினைத்தவர்கள் விரைவில் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டனர்.

கேரளாவைத் தாக்கிய ஒவ்வொரு இயற்கைப் பேரிடரும் முதலமைச்சரின் புதிய ஆற்றல் ஒன்றை வெளிக்கொண்டு வந்தது. அதுவே மக்கள் அவருக்கு `` கேப்டன் '' என்ற பட்டத்தை வழங்க வைத்தது. மீனவர் சமூகங்களைப் பேரழிவிற்கு உட்படுத்திய 2018 மற்றும் 2019 புயல், வெள்ளாமாகட்டும், நிபா வைரஸ் ஆகட்டும் அல்லது நீண்ட காலம் நீடித்து வரும் கொரோனா , வைரஸ் காய்ச்சல்கள் வரை  முதல்வர் பினராயி விஜயன் அரசு நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருந்தனர்

குறிப்பாக 2018 வெள்ளத்தில், பஞ்சாயத்து மட்ட அதிகாரிகள் வரை முடிவெடுப்பதைப் பரவலாக்குவதன் மூலம் மக்களை ஒன்றுபட்ட சக்தியாகச் செயல்பட வைத்தார். கேரளாவை பேரழிவிற்கு உட்படுத்திய வெள்ளத்தின் போது முதல்வர் காலை 9 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்து அதிகாலை 1.30 மணி வரை அதிகாரிகள் மற்றும் பிறருடன் ஒருங்கிணைந்து பணியாற்றினார் என்று  செய்திகள் வெளியானது சாதாரண நாட்களில் அவர் காலை 9 மணி முதல் இரவு 10.30 மணி வரை பணியாற்றுவாராம்.

கட்சி மீட்பு

கேரள அரசியலில் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்து கட்சி என்ற அந்த பிம்பத்தை விஜயன் மாற்றினார். ஒரு காலத்தில், கட்சி தனது உறுப்பினர்களை இழந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

சிறுவயதில் புரட்சி கேரளாவின் கேப்டன் .. முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்து வந்த பாதை | Kerala Politics In Tamil

ஆனால் உறுப்பினர் வீழ்ச்சி ஏற்படவில்லை. முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களிடமிருந்து உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் கட்சி தனது உறுப்பினர்களை விரிவுபடுத்தியதே இதற்குக் காரணம்.

ஊடகங்களுக்கு அஞ்சியதில்லை

இதை அவர் மிகவும் புத்திசாலித்தனமாகச் செய்தார். இது பழம் பெருச்சாளிகளின் கட்சியல்ல. புதிய உறுப்பினர்கள் அவரைக் கவனிக்கிறார்கள். அவர் வியூகம் அமைப்பதில் வல்லவர். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மோதியுடன் ஒப்பிடக்கூடிய பல அம்சங்கள் இவருக்கு உள்ளன ஒவ்வொரு முறையும் ஒரு நெருக்கடி அரசை சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு முறையும் ஊடகங்களை தனிப்பட்ட முறையில் செய்தியாளர் சந்திப்பை தினந்தோறும் கூட்டிய அவரது செயல், அவரது ஆளுமையை மேம்படுத்தியது அதனால் தான் தற்போது அவரை முதலமைச்சராக்கிய அழகு பார்க்கின்றனர் கேரள மக்கள்