குடித்துவிட்டு மாரியம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட எஸ்ஐ - வைரல் வீடியோ!

Viral Video Kerala
By Sumathi Apr 07, 2023 09:55 AM GMT
Report

எஸ்ஐ குடிபோதையில் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடிபோதை

கேரளா, சாந்தன்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜி. அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் இவரது தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடித்துவிட்டு மாரியம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட எஸ்ஐ - வைரல் வீடியோ! | Kerala Police Si Drunk And Dance Viral Video

அப்போது அங்கு அம்மன் பக்தி பாடலான மாரியம்மா.. மாரியம்மா.. பாடல் பாடிக் கொண்டிருந்த நிலையில், சீருடையில் இருந்த எஸ்ஐ இசைக்கு ஏற்ப சாமியாட்டம் ஆடினார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அதனை கண்டு ரசித்து தாளம் போட்டனர்.

வைரல் வீடியோ

இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இது வேகமாக பரவியதையடுத்து முன்னாள் DSP தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், உதவி ஆய்வாளர் பணி நேரத்தில் மது அருந்தி விட்டு குடி போதையில் கட்டுப்பாடு மறந்து சாமி ஆட்டம் போட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, ஷாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.