3 மாதங்களாக சிறுமியை சீரழித்த கொடூர கும்பல் : கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Kerala Crime
By Irumporai Nov 17, 2022 11:50 AM GMT
Report

கேரளாவில் சிறுமி ஒருவரை கடத்தி சென்ற கும்பல் 3 மாதங்களாக 4 மாவட்டங்களுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமிக்கு வன் கொடுமை

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். சிறுமியைக்காணாமல் தவித்த பெற்றோர் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர் .

3 மாதங்களாக சிறுமியை சீரழித்த கொடூர கும்பல் : கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் | Kerala Police Arrest Accused Misbehave Girl

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 மாதங்களுக்கு சிறுமியினை மீட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு போதைக்கும் அடிமையாகியிருந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சிறுமியிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் அந்த சிறிமி வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியே வந்து பேருந்துக்காக காத்திருந்த போது அவரிடம் பேச்சு கொடுத்த இளைஞர் லாட்ஜூக்கு அழைத்து சென்று வன் கொடுமை செய்துள்ளார்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்

அவர்களிடமிருந்து தப்பிய சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளர், அதன் பிறகு திருச்சூர், வயநாடு, பாலக்காடு என வெவ்வேறு மாவட்டங்களுக்கு 3 மாதங்களாக சிறுமியை கடத்தி சென்று போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அதில் 8 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான 13 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது