வாட்ஸ்அப்பில் வந்த நிர்வாண புகைப்படங்கள் - விசாரணையில் சிக்கிய இரு பெண்கள்

kerala moneycheating pornphotos
By Petchi Avudaiappan Mar 03, 2022 04:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 கேரளாவில் டாக்டருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பணம் பறிக்க முயன்ற இரு பெண்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த டாக்டர் ஷா நவாஸ் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு நம்பரில் இருந்து ஹாய் என மெசெஜ் வந்துள்ளது. புது நம்பர் என்பரால் ஷா நவாஸ் அதற்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து அதே நம்பரில் இருந்து மெசெஜ் வர அதனை பார்த்த டாக்டருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

2 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் யாரோ அனுப்பிருக்க சம்பந்தப்பட்ட நம்பரை தொடர்புக் கொண்டுள்ளார். முதலில் எதிர் முனையில் யாரும் பேசாத நிலையில் சிறிது நேரத்தில் அந்த எண்ணிலிருந்து ரூ.3 லட்சம் தராவிட்டால் போலீசில் புகார் செய்யப்படும் என தகவல் வந்துள்ளது. பணத்தை கொடுக்காவிட்டால் போலீசில் உங்கள் மீது பாலியல் வன்கொடுமை புகாரளிக்கப்படும் என மீண்டும் மிரட்டப்பட உடனடியாக வெளிநாட்டு எண்களில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து பயந்து போன டாக்டர் ஷா நவாஸ் உடனடியாக போலீசில் புகார் தந்தார். உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் பணத்தை தருவதாக ஒப்புக்கொள்வது போல கூறி குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி தெரிவிக்க திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் பணத்துடன் காத்திருக்கும்படியும், பெங்களூரில் இருந்து 29 வயது பெண் அந்த பணத்தை பெற்றுக் கொள்ள ஸ்டேஷனுக்கு வருவார் என்றும் சொல்லப்பட்டது.

சொன்ன நாளில் டாக்டர் ஷா நவாஸ், போலீசார் ஆகியோர் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க சம்பந்தப்பட்ட பெண் வந்துள்ளார். அவரைச் சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காயங்குளத்தை சேர்ந்த நிஷா என்பது தெரியவந்தது. அதன்பிறகு நிஷாவிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய அவரது தோழி நௌபியாவும் கைது செய்யப்பட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.