கேரளாவை உலுக்கிய இளம் பெண் பாலியல் வன்கொடுமை - பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை...!

Sexual harassment Kerala
By Nandhini Dec 29, 2022 07:48 AM GMT
Report

கேரளாவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்

கேரளாவைச் சேர்ந்தவர் கத்தோலிக்க பாதிரியார் ராஜு கோகன். இவர் 2014ம் ஆண்டு மறைமாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இச்சம்பவம் பூதாகரமாக வெடித்ததையடுத்து, ராஜு கோகன் தப்பி ஓடி தலைமறைவானார். இருப்பினும், கேரள போலீசார் அவரை தீவிரமாக தேடி, தமிழகத்தின் நாகர்கோவிலில் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

kerala-pocso-case-sexually-assaulting-minor-girl

7 ஆண்டு சிறைத்தண்டனை

இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் தொடர்பான விசாரணை, கேரளா, திருச்சூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் நடந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, ​​விரைவு நீதிமன்றம் 18 சாட்சிகளை விசாரித்தது. மேலும், மொபைல் போன் தவிர 24 ஆவணங்களை ஆய்வு செய்தது.

எது நடந்ததோ, அதுவும் ஒரு பாதிரியாரால் நடந்திருக்கக் கூடாது என்றும், அவர் எந்தப் பரிசீலனைக்கும் தகுதியற்றவர் என்றும் நீதிமன்ற நீதிபதி கூறினார். இந்த விசாரணை முடிவில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ராஜு கோகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டனர்.