லாட்டரி கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Kerala
By Nandhini Mar 06, 2023 11:37 AM GMT
Report

கேரளாவில் லாட்டரி கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

லாட்டரி கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

கேரள மாநிலம், திருப்புணித்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை கடைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால், மீனாட்சி ஏஜென்ஸி என்ற லாட்டரி கடைக்கு தீ வைக்கப்போவதாகவும் கூறி, கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து கடையில் இருந்த லாட்டரி சீட்டுக்கள் மீறி ஊற்றி நெருப்பை பற்ற வைத்தார். இதைப் பார்த்த கடையில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.

தீயில் லாட்டரிச் சீட்டுக்கள் மளமளவென எரிந்தது . தீயை அணைப்பதற்குள் லாட்டரி சீட்டுக்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதையடுத்து, ராஜேஷ் அக்கடையின் முன் நின்று லாட்டரிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிலர் வாழ்த்து தெரிவித்தும், சிலர் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.           

kerala-petrol--lottery-shop-and-set-it-on-fire