ஒரு தலை காதல் - காதலிக்காத பெண்ணின் முடியை அறுத்தெறிந்த காதலன்
கேரளாவில் ஒரு தலையாக காதலித்து வந்த நபர், ஆத்திரத்தில் தன் காதலியின் தலை முடியை வெட்டி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே சுனில்குமார் என்ற 25 வயது வாலிபர், அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவருடன் வேலைபார்க்கும் ஒருவரின் மகளையும் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பல முறை தன் காதலை எடுத்து சொல்லியும் சுனில்குமாரின் காதலை அவர் ஏற்கவில்லை. இதனால் தினமும் தன் காதலை ஏற்குமாறு கூறி அவரை ஏற்க கூறி டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து அந்த பெண் அவரது காதலை ஏற்காததால் ஆத்திரத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற சுனில் குமார் அவரது தலைமுடியை துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அழுத நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுனில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.