ஒரே இரவில் மாறிய 60 வயது தாத்தாவின் வாழ்க்கைப் பாதை - என்ன நடந்தது?

mammikka keralasupermodel Modellingmammikka DailyWagerTurnedModel
By Petchi Avudaiappan Feb 15, 2022 05:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முதியவரின் வாழ்க்கை ஒரே இரவில் திசை மாறியது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்த மம்மிக்கா என்ற 60 வயது முதியவர் தினக்கூலி வேலைகளை தனது வாழ்க்கையை கடத்தி வருகிறார். அனைவரிடத்திலும் சிரித்த முகத்தோடு சகஜமாக பழகும் இவர் எந்த வேலை கொடுத்தாலும் அசராமல் செய்வதில் வல்லவர். 

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நன்கு பழக்கம் கொண்ட மம்மிக்காவை அப்பகுதியைச் சேர்ந்த  ஷரீக் என்ற போட்டோகிராபர்  பார்த்துள்ளார். அவரின் தோற்றம் சூப்பராக இருக்க மம்மிக்காவை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார்.  முதலில் மறுத்த அவர் தான் எடுத்த போட்டோக்களை காட்டி ஷரீக் சம்மதம் பெற்றுள்ளார். 

ஒரே இரவில் மாறிய 60 வயது தாத்தாவின் வாழ்க்கைப் பாதை - என்ன நடந்தது? | Kerala Old Labourer Turns Model Photoshoot

உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்காக கூலாக கோட் சூட் அணிந்து, கண்ணாடி போட்டு கெத்தாக மம்மிக்கா போஸ் கொடுக்க அவரது போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. குறிப்பாக மம்மிக்கா கார் பக்கம் நிற்பதும், நடப்பதும், கையில் டேப் லேட் வைத்து அதை பார்ப்பதும் என போட்டோக்கள் அனைவரையும் கவர்ந்தது. 

இதனால் ஒரே இரவில் கேரளாவின் சூப்பர் மாடலாக மம்மிக்கா உருவெடுத்துள்ளார். மேலும் தனக்கென இன்ஸ்டாகிராமில் பக்கம் ஒன்றையும் தொடங்கி உள்ள அவர் இனி கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் செய்ய போவதாக கூறியுள்ளார்.