Wow.... இடுக்கில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் - ரம்மியமயமான வீடியோ வைரல்...!
கேரளா மாநிலம், இடுக்கில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்
மூணாறு - குமளி மாநில நெடுஞ்சாலையில், கேரளாவின், இடுக்கி மாவட்டத்தின் சந்தன்பாறை கிராம பஞ்சாயத்துக்கு அருகில் உள்ள பொறியாளர் உயரம் (மெட்) எனப்படும் கள்ளிப்பாறை மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி பரவலாக பூத்து குலுங்குகிறது.
12 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் இந்த குறிஞ்சி பூவை பார்க்க அந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
2018ம் ஆண்டு, மூணாறில் நீலக்குறிஞ்சி பூத்தது. இதனையடுத்து, தற்போது, இந்த நீலநிற குறிஞ்சிப் பூக்கள் பூத்துகுலுங்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இங்கு வந்து பார்வையிடும் சுற்றுலா பயணிகள் பூக்களின் அழகில் மெய்மறந்து ரசித்து வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Without plans and without even getting ready for something...
— Naveen (@Navigraha) October 11, 2022
Jus take the bike n getting away is kind off fun??#NEELAKURINJI ? pic.twitter.com/uB1IL9qqVc
#neelakurinji has bloomed in Kallippara, Idukki after a gap of 12 years.
— Bobins Abraham Vayalil (@BobinsAbraham) October 9, 2022
Though it is not as widespread as the #Neelakurinji bloom in #Munnar in 2018, it is still a majestic view.@KeralaTourism pic.twitter.com/MHoU7yUMxz
#Neelakurinji has bloomed widely in the #Kallippara hills known as Engineer Heights (Mett) near Santhanpara gram panchayat of #Kerala's #Idukki district on the Munnar-Kumali State Highway.
— Onmanorama (@Onmanorama) October 13, 2022
Check out the link in the thread to know how to reach there. pic.twitter.com/jsDkYDzkG9