‘கொடி’ பட பாணியில் ரியல் காதல் ஜோடிகளான ‘கேரளா மேயர் - எம்.எல்.ஏ’ - குவியும் வாழ்த்துக்கள்

married engaged KeralaMayor-MLA lovecouple
By Nandhini Feb 16, 2022 09:16 AM GMT
Report

நடிகர் தனுஷ், நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கொடி’ படத்தில் வருவதை போல, கேரளாவில் அரசியல்வாதிகள் இரண்டு பேர் "ரியல்" ஜோடியாக மாறியுள்ளனர்.

ஆமாம்... திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரள சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் தேவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கேரளா, திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன். இவர் தான் இந்தியாவிலேயே இளம் மேயராவார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரள மாநிலம் இளவயதினருக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது.

‘கொடி’ பட பாணியில் ரியல் காதல் ஜோடிகளான ‘கேரளா மேயர் - எம்.எல்.ஏ’ - குவியும் வாழ்த்துக்கள் | Kerala Mayor Mla Love Couple Engaged Married

கல்லூரி மாணவியாக இருந்த இவரை மேயராக்கி அழகு பார்த்தது மார்க்சிஸ்ட் கட்சி. இதனால், மேயரானார் ஆர்யா ராஜேந்திரன்.

கேரள சட்டப்பேரவையில் மிக இளவயது உறுப்பினர் சச்சின் தேவ் (28). இவர் இந்திய மாணவர் சங்கத்தில் மாநில செயலாளராக இருக்கிறார்.

ஆர்யா ராஜேந்திரனும், சச்சின் தேவும் சிறுவயதிலிருந்தே இந்திய மாணவர் சங்கத்தில் இருந்து வந்துள்ளனர். அப்போது, இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு வளர்ந்தது.

நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மலர, தற்போது திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.