குழந்தைகளால் அடித்த அதிர்ஷடம்; அபுதாபியில் வென்ற கேரள வாலிபர் - பரிசு ரூ.33 கோடி!

Lottery Kerala India
By Jiyath Feb 11, 2024 06:03 AM GMT
Report

கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அபுதாபி லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு வென்றுள்ளார். 

பிக் டிக்கெட் அபுதாபி

கேரளாவை சேர்ந்த ராஜீவ் அரிக்கத் (40) என்பவர் அபுதாபி அல் ஐனில் கட்டடக்கலை நிபுணராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பிக் டிக்கெட் அபுதாபி (Big Ticket) வாராந்திர டிராவில், 15 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33 கோடி) வென்றிருக்கிறார்.

குழந்தைகளால் அடித்த அதிர்ஷடம்; அபுதாபியில் வென்ற கேரள வாலிபர் - பரிசு ரூ.33 கோடி! | Kerala Man Wins 33 Crore Jackpot In Lottery Ticket

ராஜீவ் கடந்த 3 ஆண்டுகளாக அங்கு லாட்டரி வாங்கி வந்த நிலையில், தற்போது மிகப் பெரிய தொகை பரிசாக விழுந்திருக்கிறது. இந்த வெற்றி அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஒரே ஒரு வார்த்தை.. கேரள சிறுமியை அழ வைத்த த.வெ.க தலைவர் விஜய் - வைரலாகும் Video!

ஒரே ஒரு வார்த்தை.. கேரள சிறுமியை அழ வைத்த த.வெ.க தலைவர் விஜய் - வைரலாகும் Video!

மகிழ்ச்சி 

ஏனெனில், அந்த லாட்டரி எண், அவரின் குழந்தைகளின் பிறந்தநாள் தேதியின் காம்பினேஷன். இதுகுறித்து ராஜிவ் கூறுகையில், நான் கடந்த 3 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்குகிறேன். லாட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறை.

குழந்தைகளால் அடித்த அதிர்ஷடம்; அபுதாபியில் வென்ற கேரள வாலிபர் - பரிசு ரூ.33 கோடி! | Kerala Man Wins 33 Crore Jackpot In Lottery Ticket

இரண்டு மாதங்களுக்கு முன்பு 1 மில்லியன் திர்ஹம்ஸை தவறவிட்டேன். ஆனால், இம்முறை அதிர்ஷ்டம் என் பக்கமாக இருந்திருக்கிறது" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.