சாலையில் நின்றிருந்த கார்; வாயில் நுரை தள்ளிய நிலையில் 3 சடலங்கள் - பின்னணி!
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடன் தொல்லை
தேனி, கம்பம் சாலையில் ஓடை பகுதியில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருந்தது. அதனை அப்பகுதி மக்கள் சென்று பார்த்ததில் 3 பேர் இறந்த நிலையில் இருந்துள்ளனர்.
தகவலறிந்து உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் 3 சடலங்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் காரில் இருந்தவர்கள் கேரளா, தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 60), அவரது மனைவி மெர்சி (58), மகன் அகில் (29) என்பது தெரியவந்தது.
குடும்பமே தற்கொலை
ஜார்ஜ் கோட்டயம் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் அவர் கடன் வாங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அப்படியும் கடன் வாங்கியவர்களிடம் தப்பிக்க முடியாது என எண்ணி கேரளாவில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கிவிட்டு அங்கிருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்டுள்ளனர்.
பின், கம்பத்திற்கு வந்த அவர்கள் காரில் இருந்தவாறே தாங்கள் வாங்கி வந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்போது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.