Viral News: இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறும் கேரள நபர்
கேரளாவில் சமீபத்தில் பேருந்து பயணத்தின் போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
குறித்த நபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அப்பெண் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இரும்பு கூண்டுடன் நபர்
இந்நிலையில் ஆண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக பல செயல்களை செய்கின்றனர், அவற்றில் ஒன்றாக அட்டைப்பெட்டியுடன் பலர் வலம்வந்தனர்.

இந்நிலையில் நபர் ஒருவர் இரும்பு கூண்டுடன் வீட்டை விட்டு வெளியேறும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வெளியாக பலரும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
இனி ஆண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், இதுதான் சரியான தீர்வு, நல்ல யோசனை என கமெண்டுகள் குவிந்து வருகிறது.