பாலியல் அத்துமீறல்; பெண் பகிர்ந்த வீடியோ வைரல் - விபரீத முடிவு எடுத்த நபர்
பாலியல் அத்துமீறல் என வீடியோ ஒன்று வைரலான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நபர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
பாலியல் அத்துமீறல்
கேரளா, கோழிக்கோட்டில் பெண் ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடன் பயணித்த 42 வயதுடைய நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த இளம்பெண் அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்த நிலையில், அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தொடர் விசாரணையில், தீபக் என்ற நபர் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாகவும், குடும்பத்தார் கதவை தட்டியும் வெகு நேரமாக கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டபடி கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
நபர் தற்கொலை
இவர் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், வேலை காரணமாகவே கண்ணூருக்கு சென்றிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபக் ஒரு அப்பாவி, இந்த வீடியோவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே விபரீத முடிவு எடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.