மந்திரவாதி பேச்சை நம்பி கொலை - ஜாமீனில் வந்தும் செய்த கொடூரம்
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த நபர் இரட்டை கொலை செய்துள்ளார்.
மந்திரவாதி
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள நென்மாரா பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை. இவரது மனைவி, இவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

நீண்ட கூந்தல் கொண்ட பெண் ஒருவர் தான் சூனியம் செய்து குடும்பத்தை சீரழித்து விட்டதாகவும் மனைவி பிரிந்ததற்கு அவர்தான் காரணம் என மந்திரவாதி ஒருவர், செந்தாமரையிடம் கூறியுள்ளார்.
இரட்டை கொலை
இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சஜிதா என்ற பெண்ணை செந்தாமரை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், 2 மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று(27.01.2025) முன்தினம் சஜிதாவின் கணவர் சுதாகரன் (50) மற்றும் சுதாகரனின் தாய் லட்சுமி(75) ஆகியோரை அவர்களது வீட்டில் செந்தாமரை கொலை செய்துள்ளார். கொலை செய்து விட்டு அவரது வீட்டிற்கு பின்னர் இருந்த போத்துண்டி மலைப் பகுதியில் பகுதியில் பதுங்கியுள்ளார்.
காவல்துறை அலட்சியம்
நேற்று செந்தாமரை சாப்பிடுவதற்காக மலையிலிருந்து இறங்கி வந்தபோது காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
செந்தாமரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஆவேசத்துடன் காவல்நிலையம் முன்பு குவிந்து அவரை விடுவியுங்கள் நாங்களே தண்டனை வழங்குகிறோம் என கூறினர். அந்த பகுதியில் பதட்டம் நிலவியதையடுத்து பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
ஜாமீனில் வெளிவந்த செந்தாமரையால் அச்சுறுத்தல் உள்ளதாக சஜிதாவின் குடும்பத்தினர் முன்னதாக புகார் அளித்த போது காவல்துறை அலட்சியமாக இருந்துள்ளது. அலட்சியமாக இருந்த தலைமை காவலர் மகேந்திர சிம்மனை பனி இடைநீக்கம் செய்து பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Singappenne: குழிக்குள் சிக்கித் தவிக்கும் ஆனந்தி, அன்பு... துளசியின் அடுத்த திட்டம் ஆரம்பம் Manithan