அதிகரிக்கும் கொரோனா : முகக் கவசம் அணிவதை கட்டாயமக்கிய அரசு
COVID-19
Kerala
By Irumporai
கேரளாவில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளதால் மற்ற நாடுகளும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

முகக் கவசம் கட்டாயம்
மேலும், வாகனங்கள், அரசுப் பேருந்துகளில் செல்லும்போதும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அனைவரும் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவு ஜன.12 முதல் ஒரு மாதத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.