கேரளாவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
lockdown
kerala
announce
night lockdown
By Anupriyamkumaresan
கேரளாவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
நாட்டிலேயே தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளாதான் பல வாரங்களாக உள்ளது. இந்த நிலையில், ஓணம் பண்டிகை காரணமாக அளிக்கப்பட்ட தளர்வுகளால் தொற்று பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.