ஒரு ஆண்டாக கழிவறையில் தனியாக வாழ்ந்த பெண்! எப்படி சாத்தியம்?
கேரளாவில் பெண் ஒருவர், கடந்த ஒரு ஆண்டு காலமாக, ஒற்றை நபராக கழிவறையில் வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலகாடு பகுதியைச் சேர்ந்த பெண் முருகா, ஏழை குடும்பத்து பெண்ணான இவரை இவரது கணவரும், மகளும் கைவிட்டுவிட்டனர்.
இதனால் இவர் தனக்கு சொந்தமான பழைய வீட்டில் வசித்து வந்தார். வருமானத்திற்காக கூலி வேலைக்கு சென்றுவந்தார். அதில் வரும் வருமானம் அவரது தினசரி உணவு செலவிற்கே சரியாக போனது.
அதை தவிர வேறு எந்த செலவையும் அவரால் செய்ய முடியவில்லை. பல நேரங்களில் அவர் உணவைகூட அக்கம் பக்கதினரிடமிருந்து தான் வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் அவர் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அவரால் அந்த வீட்டில் வசிக்க முடியாத காரணத்தால் வேறு வழியில்லாமல் முருகா தன் வீட்டின் வெளிப்புறம் உள்ள கழிப்பறையில் சென்று தங்கினார்.
கடந்த ஒரு ஆண்டாக அங்கே தான் தங்கியுள்ளார். இது குறித்து கேரளா டிவி சேனலில் சிறப்பு செய்தி ஒன்று வெளியானது. அதில் அவர்கள் ஒரு வருடமாக கழிப்பறையிலேயே வாழும் பெண் என்று செய்தி வெளியிட்டனர்.
இதை பார்த்த அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தன் கட்சி உறுப்பினர்களிடம் சொல்லி அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அந்த பெண்ணின் வீட்டை கட்டி தரவும் உத்தரவிட்டார். அதன் பேரில் அப்பகுதியில் உள்ள அவரது கட்சி சார்ந்த உறுப்பினர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு அவரது இடிந்த போன வீட்டை சீரமைத்து தர உறுதியளித்தனர்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு ஆண்டாக தனி ஆளாக ஒரு பெண் கழிப்பறையிலேயே வாழ்ந்த சம்பவம் தற்போது பலரை ஆச்சரியமடைய செய்துள்ளது.