தம்பதி நடத்திய போட்டோ ஷூட் - கோபத்தில் தென்னை பட்டையை எடுத்து தூக்கி அடித்த ‘சிங்கிள்' யானை...!
கேரளாவில் தம்பதி இருவர் நடத்திய போட்டோ ஷூட்டால், கோபமடைந்த சிங்கள் யானை தென்னை பட்டையை எடுத்து தூக்கி அடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தென்னை பட்டையை எடுத்து தூக்கி அடித்த ‘சிங்கிள்' யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கேரளா மாநிலம், கொல்லம், பன்மன ஸ்ரீ சுப்பிரமணிய கோயிவிலில் ஜெய்சங்கர் என்ற மணமகனுக்கும், கிரீஷ்மா என்ற மணமகளுக்கும் திருமணம் முடிந்தது. இதனையடுத்து, இத்தம்பதி இருவரும் ஒரு யானை முன்பு நின்று போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இதையெல்லாம் பார்த்து பொறுமையை இழந்த அந்த சிங்கிள் யானை அங்கிருந்த தென்னை மட்டையை எடுத்து அத்தம்பதி மீது வீசியது. நல்லவேளையாக அத்தம்பதி இருவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து.. இந்த யானை முரட்டு சிங்களா இருக்கும்போலயே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Just missuuu??? pic.twitter.com/uMMkFtqDEr
— அப்பா பொண்ணு ?? (@Hemanika_111) December 10, 2022